சிரிப்பு... சிரிப்பு... சிரிப்பு... வந்தாலே சிறப்பு!

நாம் குழந்தைகளாக இருந்த போது சிரித்த அந்த சிரிப்பு, தொடர் சிரிப்பு இப்போது பரவலாக இல்லையே... ஏன்?

கால மாற்றத்தில், பொருளாதார நெருக்கடி, பணிச்சுமை, இலக்கு, குழந்தைகளின் எதிர்காலம் என, அதிலேயே மூழ்கி போவதால், சிரிப்பு குறைந்து போய் விட்டது.

ஆனால், மக்களை சிரிக்க வைத்தே தீருவோம் என கங்கணம் கட்டி, அதில் வெற்றியும் பெற்று வருகிறது, கோவை நகைச்சுவை சங்கம்.

கோவையில் பல ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்டு வந்த நகைச்சுவை நிகழ்ச்சிகள், ஒரு கட்டத்தில் அப்படியே கைவிடப்பட, இதுமாதிரியான ஒரு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற ஆவலில், 2022 மார்ச் மாதம், 8 பேர் கொண்ட குழுவினர் துவங்கியது தான், இந்த நிகழ்ச்சி.
முதன் முதலில், வடகோவை சத்யநாராயணா ஹாலில், திருவாரூர் சண்முக வடிவேல் பேச, சிரித்துத்தீர்க்க திரண்டு வந்தது, கட்டுங்கடங்காத கூட்டம்.

ஆக... மக்கள், நகைச்சுவையை அதிகம் விரும்புகின்றனர் என தெரிந்து, வருடத்துக்கு எட்டு நிகழ்ச்சிகள் வரை, நடத்த துவங்கியிருக்கின்றனர்.

சிரிப்பில் பல ரகங்கள்





பிறரை பார்த்து ஏளனமாக சிரிப்பது தான் தவறு. ஆனால், வயிறு வலிக்க சிரிக்க வைப்பது மிகப்பெரிய கலை. இது ஆரோக்கியத்துக்கும் வித்திடுகிறது.

சிரித்து வாழ வேண்டும் என்பதை நாங்கள் நினைவுப்படுத்துகிறோம்; அவ்வளவு தான்,'' என்கிறார், கோவை நகைச்சுவை சங்க செயலாளர் தனபால்.
இன்றைக்கும், காமெடி படங்களுக்கு வரக்கூடிய கூட்டம் அதிகமாகத்தான் இருக்கிறது. அந்தளவுக்கு, நகைச்சுவை வாழ்வில் ஒரு இடம் பிடித்திருக்கிறது.

Advertisement