வேங்கை வயல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிக்கு தண்டனை வழங்கணும்: விஜய் வலியுறுத்தல்
சென்னை: வேங்கை வயல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிக்கு தண்டனை வழங்க வேண்டும் என த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:ஒரு விசாரணையின் முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன எனில், அவற்றை மறு விசாரணைக்கு உட்படுத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை. வேங்கை வயல் விவகாரத்தில், குற்றம் செய்தவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் குறித்துப் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.
எனவே, குறைகாணவே இயலாத நடுநிலையான பார்வையுடன் இந்த விவகாரத்தில், உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் மக்களுக்கும் சரியான நீதி வழங்கப்பட்டது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதே இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும்.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சி.பி.சி.ஐ.டி., ஏற்கெனவே விசாரணை நடத்தி, கால தாமதமாக விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசின் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் அது மேலும் கால தாமதத்தையே ஏற்படுத்தும். இது வேங்கை வயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது.
வேங்கை வயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். வருங்காலங்களில் இது போன்ற ஒரு கொடுஞ்செயல் நிகழாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆகவே, கடும் கண்டனத்திற்கு உரிய, மனிதத் தன்மையற்ற செயலான வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு நியமித்து விசாரணை நடத்தி, உண்மையானக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (5)
அப்பாவி - ,
27 ஜன,2025 - 06:52 Report Abuse
உண்மையான குற்றவாளிகள் தத்திம்மிக, ஒன்றிய அரசும், அதிகாரிகளும்தான். எப்பிடி தண்டிக்கிறது?
0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
26 ஜன,2025 - 18:54 Report Abuse
விசையண்ணா ...... சிக்கினவங்க கூட குற்றவாளிகளா இருக்கலாம் .... இல்லாமலும் இருக்கலாம் .... விசாரணை முடிவில் உண்மை வெளியாகவேண்டும் .... அதெப்படி சொல்றீங்க, உண்மையான குற்றவாளிக்கு தண்டனை கொடுக்கணும் ன்னு ???? உங்களுக்கு உண்மையான குற்றவாளி யாரு ன்னு தெரியுமா ????
0
0
Reply
BHARATH - TRICHY,இந்தியா
26 ஜன,2025 - 16:36 Report Abuse
காமெடி பீஸ்
0
0
Reply
ஈர வெங்காயம் - ,
26 ஜன,2025 - 15:36 Report Abuse
பட்டியல் இன கனவான்கள் எப்பவுமே தப்பு பண்ண மாட்டாங்க... என்னா ஒரு அயோக்கியதனம்.. அறிவில் பிற்படுத்தப்பட்ட BC மற்றும் முற்படுத்தபட்ட FC சமூகத்தினர் யாருமே இதை செய்ய மாட்டார்கள்
0
0
Reply
கூமூட்டை - ,இந்தியா
26 ஜன,2025 - 15:32 Report Abuse
இது தான் முதலை கணினி மாடல்
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement