மஹா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து; வாகன நிறுத்தம் பகுதியில் பரபரப்பு

3

பிரயாக்ராஜ்; உ.பி., கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து நிகழ்ந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



பிரயாக்ராஜில் கடந்த 13ம் தேதி மஹா கும்பமேளா நிகழ்வு தொடங்கியது. இந்த மேளா பிப்.26ம் தேதி நிறைவு பெறுகிறது.


கும்பமேளாவைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். சில நாட்கள் முன்பு கும்பமேளாவின் ஒரு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு 18 கூடாரங்கள் எரிந்து சேதம் அடைந்தன. எந்த உயிர்ச்சேதமும் நிகழவில்லை.


இந் நிலையில், பிரயாக்ராஜில் இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. கும்பமேளா செல்லும் பிரதான சாலையில் உள்ள வாகன நிறுத்தத்தில் அதிகாலை 6.30 மணியளவில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. அங்கிருந்த 2 வாகனங்களில் தீ பரவியதால் திடீர் பரபரப்பும், பீதியும் நிலவியது.


சம்பவத்தை அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் எவ்வித உயிர்ச்தேமும் ஏற்படவில்லை. தொலைதூரத்தில் இருந்து வாகனங்கள் வருவதால் என்ஜினில் அதிக சூடு ஏற்பட்டு, தீ விபத்து நிகழ காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement