தனியார் பள்ளிகளுக்கு  நிரந்தர அங்கீகாரம் வழங்க வலியுறுத்தல் 

ராமநாதபுரம் : -தனியார் பள்ளிகளுக்கு அரசு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என, தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தில் தனியார் பள்ளிகள் சங்கத்தின் உயர்நிலைக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் வாசன் தலைமை வகித்தார். செயலாளர் செல்லத்துரை அப்துல்லா வரவேற்றார். இதில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். பள்ளி கட்டடங்களுக்கு டி.டி.சி.பி., ஆணை வழங்க வேண்டும்.

மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும். பள்ளிகளுக்கான பாதுகாப்பு சட்டத்தினை நிறைவேற்ற வேண்டும். மாணவர்கள் கட்டணம் செலுத்தாமல் வேறு பள்ளிக்கு செல்லும் பட்சத்தில் ஏற்கனவே படித்த பள்ளியில் பாக்கி இல்லாமல் கட்டணத்தை கட்டி விட்டார்களா என்ற உறுதிசெய்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில துணைத்தலைவர்கள் இன்ஸ்டின், ராஜாராம், ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி, துணை செயலாளர் சண்முகம், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் சுந்தரராஜன், பாண்டியன் பங்கேற்றனர்.

பொருளாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

Advertisement