ரெனோ கார்களுக்கு கூடுதல் அம்சங்கள்

'ரெனோ' நிறுவனம், அதன் 'கைகர்' மற்றும் 'ட்ரைபர்' கார்களை மேம்படுத்தி உள்ளது. கைகர் மற்றும் ட்ரைபர் கார்களுக்கு, பவர் வின்டோஸ், சென்ட்ரல் லாக்கிங் ஆகியவை அடிப்படை அம்சங்களாக வழங்கப்பட்டுள்ளது. 'ஆர்.எக்ஸ்.எல்.,' மாடல் முதல் அனைத்து மாடல்களுக்கும், 8 அங்குல டச் ஸ்கிரீன் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, பின்புற கேமரா ஆகிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கைகர் கார் அணிவகுப்பில் உள்ள 'ஆர்.எக்ஸ்.எல்., - ஆர்.எக்ஸ்.இ., - ஆர்.எக்ஸ்.டி.,' ஆகிய மாடல்களின் விலை 10,000 முதல் 20,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அத்துடன், கைகர் 'ஆர்.எக்ஸ்.டி., (ஒ) டர்போ சி.வி.டி.,' என்ற சி.வி.டி., ஆட்டோ கியர்பாக்ஸ் கொண்ட குறைந்த விலை மாடல் காரின் விலை, 30,000 ரூபாய் குறைக்கப்பட்டு, 10.30 லட்சம் ரூபாயாக உள்ளது.

Advertisement