பலாத்கார வழக்குகளில் நேற்று கைதானவர்கள்!

சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய போக்சோ
திருச்சியில் ஆசிரியர்; புதுக்கோட்டையில் ஏ.ஹெச்.எம்., கைது
திருச்சி அரசு பள்ளி ஆசிரியர் ஒருவரும், புதுக்கோட்டை அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஒருவரும் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்தில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓவிய ஆசிரியர் கைது
கோவையில் பள்ளி ஒன்றில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் செய்த புகாரில் ஓவிய ஆசிரியர் ராஜன் கைது செய்யப்பட்டார்.
ஆசிரியர் கைது
கடலூர் நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இயங்கி வரும் அரசு மாதிரிப் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ஞானப்பழனி கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்
சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவியை, அதே பள்ளியில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்கள், 3 பேர், கூட்டு பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். ஆத்துார் மகளிர் போலீசார், 3 மாணவர்கள் மீதும், 'போக்சோ' வழக்குப்பதிந்து கைது செய்து, சேலம் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
16 வயது மாணவன் கைது
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் பைபாஸ் சாலையோரம் நாடோடிகளாக வாழ்ந்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த, 3ம் வகுப்பு படிக்கும், 8 வயது மாணவியிடம், அதே பகுதியைச் சேர்ந்த, பிளஸ் 1 படிக்கும், 16 வயது மாணவன், சில நாட்களுக்கு முன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அப்போது அவர் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிந்தது. மாணவியின் பெற்றோர், ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார், மாணவனை போக்சோவில் கைது செய்து விசாரிக்கின்றனர்.
ஏ.ஹெச்.எம்., சிக்கினார்
புதுக்கோட்டை மாவட்டம், ஒத்தப்புளி குடியிருப்பு பகுதியில் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பெருமாள், 58, பத்தாம் வகுப்பு மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, 'சைல்டு லைன்' அமைப்புக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட குழந்தைகள் நல மைய அலுவலர்கள், பொன்னமராவதி பொறுப்பு டி.எஸ்.பி., குமார், அரிமளம் போலீசார், பெருமாள் மற்றும் மாணவியரிடம் தனித்தனியே விசாரித்தனர். தொடர்ந்து, குழந்தைகள் நல மைய அலுவலர்கள் புகாரின் படி, திருமயம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ உட்பட இரு பிரிவுகளில் வழக்கு பதிந்து, பெருமாளை நேற்று கைது செய்தனர்.
17வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
கோவையில் உள்ள இரண்டு தனியார் கல்லூரிகளில் படிக்கும் ஏழு மாணவர்கள், குனியமுத்தூர் பகுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் சமூக வலைதளம் மூலம் கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமியை சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டனர். ஆசை வார்த்தை கூறி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்களது அறைக்கு வரவழைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.
சிறுமி குறிப்பிட்ட நேரத்திற்கு வீடு திரும்பாத காரணத்தினால், அவரது பாட்டி போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை, சிறுமி இருக்குமிடத்தை கண்டுபிடித்தனர். அவரை மீட்டு விசாரணை நடத்திய போது, சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஏழு மாணவர்களை போலீசார் கைது செய்து அவர்களின் மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
16 வயது மாணவன் கைது
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் பைபாஸ் சாலையோரம் நாடோடிகளாக வாழ்ந்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த, 3ம் வகுப்பு படிக்கும், 8 வயது மாணவியிடம், அதே பகுதியைச் சேர்ந்த, பிளஸ் 1 படிக்கும், 16 வயது மாணவன், சில நாட்களுக்கு முன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அப்போது அவர் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிந்தது. மாணவியின் பெற்றோர், ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார், மாணவனை போக்சோவில் கைது செய்து விசாரிக்கின்றனர்.
சிறுமி கர்ப்பம்
புளியந்தோப்பு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த நபருடன் நெருங்கி பழகிய நிலையில் கர்ப்பமானார். சிறுமியின் தாய், கடந்தாண்டு நவம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்நிலையில், ஏழு மாத கர்ப்பமான சிறுமியை, சிகிச்சைக்காக எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அழைத்து சென்றுள்ளனர். பரிசோதனையில் 17 வயது சிறுமி என தெரிந்தநிலையில், அதிகாரி அளித்த புகாரின்படி, புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.












