பி.ஒய்.டி., சீலையன் 7 ரொம்ப 'சைலன்ட்', வேகத்தில் படு 'வயலென்ட்'

'பி.ஒய்.டி.,' நிறுவனம், அதன் 'சீலையன் மின்சார காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்நிறுவனத்தின் நான்காவது காரான இது, 'பிரீமியம்' மற்றும் 'பெர்பார்மன்ஸ்' என இரு மாடல்களில் வருகிறது.
இரு மாடல் கார்களிலும், 82.56 கி.வாட்.ஹார்., திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. கார் மாடலை பொறுத்து மோட்டார் பவர் மாறுபடுவதால், இதன் ரேஞ்ச், பிரீமியம் மாடல் காருக்கு, 482 கி.மீ.,ரும், பெர்பார்மன்ஸ் மாடல் காருக்கு, 456 கி.மீ.,ரும் வருகிறது.
இந்த காரின் வடிவமைப்பு, கிராசோவர் எஸ்.யூ.வி., காரை போன்று இருந்தாலும், முன்புறத்தில் 'பி.ஒய்.டி., சீல்' டெசான் காரை போன்று உள்ளது.
பம்பர்கள், ஹெட்லைட் மற்றும் டெயில்லைட் ஆகியவை 'எக்ஸ்' வடிவத்தில் உள்ளது. அத்துடன், 19 மற்றும் 20 அங்குல அலாய் சக்கரங்கள், 170 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ், 578 லிட்டர் பூட் ஸ்பேஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
மற்றபடி, 11 பாதுகாப்பு பைகள், 15.6 அங்குல சுழலும் டிஸ்ப்ளே, 50 வாட் ஒயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கண்ணாடி ரூப், அடாஸ் பாதுகாப்பு, ஹெட்ஸ் அப் டிஸ்பிளே ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். இந்த கார், 'கியா இ.வி., - 6' மற்றும் 'வோல்வோ சி - 40 ரீசார்ஜ்' கார்களுக்கு போட்டியாக உள்ளது.
பேட்டரி 82.56 கி.வாட்.ஹார்., - 82.56 கி.வாட்.ஹார்.,
மோட்டார் பவர் 313 ஹெச்.பி., - 530 ஹெச்.பி.,
டார்க் 380 என்.எம்., - 690 என்.எம்.,
ரேஞ்ச் 482 கி.மீ., - 456 கி.மீ.,
பிக்கப் (0 - 100 கி.மீ.,) 6.7 வினாடி - 4.5 வினாடி