ஆடி 'ஆர்.எஸ்., க்யூ8 பெர்பார்மென்ஸ்' அதிசக்தி வாய்ந்த வி8 இன்ஜின்

'ஆடி' நிறுவனம், 'ஆர்.எஸ்., க்யூ8 பெர்பார்மென்ஸ்' என்ற ஸ்போர்ட்ஸ் எஸ்.யூ.வி., காரை புதுப்பித்து, அறிமுகப்படுத்தி உள்ளது. இம்முறை இந்த காரின் செயல்திறன் அதிகரிக்கப்பட்டு, குறிப்பிடத்தக்க டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 4 லிட்டர், வி8, டுவின் டர்போ ஹைபிரிட் இன்ஜின் மேம்படுத்தப்பட்டு, 48 ஹெச்.பி., பவரும், 50 என்.எம்., டார்க்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், 100 கி.மீ., வேகத்தை 0.2 வினாடி குறைவாக, 3.6 வினாடியில் எட்டுகிறது.
டாப் ஸ்பீடு, 305 கி.மீ., ஆகும். தேன் கூட்டைப் போன்ற முன்புற கிரில், நவீன எல்.இ.டி., மேட்ரிக்ஸ் ஹெட்லைட்டுகள், ரூப் எட்ஜ் ஸ்பாய்லர், கார்பன் செராமிக் பிரேக்குகள், 23 அங்குல புதிய அலாய் சக்கரங்கள், வெளிப்புற கார்பன் பைபர் பயன்பாடு மற்றும் ஏர் வெண்ட்டுகள் ஆகியவை வெளிப்புற மாற்றங்கள். உட்புறத்தில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும், 17 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 4 - ஜோன் ஆட்டோ ஏ.சி., ரிக்லைன் சீட்டுகள், பெனரோமிக் சன் ரூப், ஏர் சஸ்பென்ஷன்கள், விஷேச குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் அமைப்பு ஆகிய அம்சங்கள் இதில் உள்ளன.
இந்த கார், 'போர்ஷே கேயென்', 'லம்போர்கினி ஊரூஸ் எஸ்.இ.,' ஆகிய கார்களுக்கு போட்டியாக உள்ளது.
இன்ஜின் - 4 லிட்டர், வி8, டுவின் டர்போ, மைல்டு ஹைபிரிட்
பவர் - 640 ஹெச்.பி.,
டார்க் - 850 என்.எம்.,
டாப் ஸ்பீடு - 305 கி.மீ.,
பிக்கப் (0 - 100 கி.மீ.,) - 3.6 வினாடி