ராம்சுரத்குமார் கோவிலில் 3ல் கும்பாபிஷேக விழா



ராம்சுரத்குமார் கோவிலில் 3ல் கும்பாபிஷேக விழா

சேலம்: சேலம், அழகாபுரம், பெரியபுதுாரில் உள்ள யோகி ராம்சுரத்குமார் கோவில் வளாகத்தில், கும்பாபிஷேக விழா இன்று தொடங்குகிறது. காலை, 5:00 மணிக்கு குரு வந்தனம், விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், மாலையில் வள்ளி கும்மிப்பாட்டு, முதல் கால யாகவேள்வி பூஜை ஆரம்பம், தீப பூஜை நடக்கிறது. நாளை காலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, கவியரங்கம், பட்டிமன்றம், இரவு, மூன்றாம் கால யாக வேள்வி பூஜை, கோபுர கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கும். 3 காலை, 6:30 மணிக்கு, 4ம் கால யாகவேள்வி, 9:30 மணிக்கு, யோகி ராம்சுரத்குமார் அன்னதான மண்டபம் அடிக்கல் நாட்டுதல், 10:15 மணிக்கு கலசம், சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. தொடர்ந்து தீபாராதனை நடத்தி, பிரசாதம் வழங்கப்படும்.

Advertisement