அரசு பள்ளி பெயர் பலகை திறப்பு விழா

புதுச்சேரி: அரியாங்குப்பம் மாதா கோவில் எதிரே உள்ள தியாகி துளசிங்கம் அரசு உயர்நிலைப் பள்ளியின் புதிய பெயர் பலகை மற்றும் தியாகி உருவப்படம் திறப்பு விழா நடந்தது.

தலைமை ஆசிரியை சத்தியவாணி வரவேற்றார். முதன்மை கல்வி அதிகாரி மோகன் முன்னிலை வகித்தார். பாஸ்கர் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, புதிய பெயர் பலகை மற்றும் உருவப் படத்தை திறந்து வைத்து பேசினார்.

விழாவில், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன், இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம், நிர்வாகிகள் சேதுசெல்வம், அபிேஷகம், சுப்பையா, சுபதேவ், தி.மு.க., நிர்வாகிகள் சீத்தாராமன், சக்திவேல், சங்கர், முருகதாஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்.

ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement