அ.தி.மு.க., பூத் முகவர் ஆலோசனை



அ.தி.மு.க., பூத் முகவர் ஆலோசனை


போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட் டம், ஊத்தங்கரை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, மத்துார் ஒன்றியத்தில் உள்ள, கண்ணன்டஹள்ளி, நாகம்பட்டி, பொம்மேபள்ளி, சிவம்பட்டி, மத்துார், களர்பதி, கவுண்டனுார், ஒட்டப்பட்டி உள்ளிட்ட பஞ்.,களில், அ.தி.மு.க., கட்சி சார்பில், பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இதில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி, மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், வரும், 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்க, ஒவ்வொரு பூத் முகவர்களும், எவ்வாறு பணியாற்ற வேண்டும் என, கட்சியின் துணை பொதுச்செயலாளர் முனுசாமி எடுத்துக்கூறி, மக்கள் மனதில் இடம் பெறும் வகையில், பணி செய்வது குறித்து அறிவுரை வழங்கினார்.

Advertisement