யானைகளால் பயிர் நாசம்
யானைகளால் பயிர் நாசம்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த ஊடேதுர்கம் வனப்பகுதியில் முகாமிட்டிருந்த, 15 யானைகள் நேற்று முன்தினம் இரவு, ஊடேதுர்கம் வனப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தன. அவை தேன்கனிக்கோட்டை வனப்பகுதி பேவநத்தம் சிவநஞ்சுண்டேஸ்வரன் மலை பகுதிக்கு சென்றன. அங்கிருந்து வெளியேறி அருகிலுள்ள கிராமங்களுக்குள் நுழைந்து, விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன. ஏற்கனவே தேன்கனிக்கோட்டை வனப்பகுதி, பேவநத்தம், நொகனுார் வனப்பகுதிகளில் சுற்றிவரும் யானைகளுடன், இந்த யானைகளையும் சேர்த்து, ஜவளகிரி வனப்பகுதி வழியாக, கர்நாடக வனத்திற்குள் விரட்ட, வனத்துறை நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement