7,030 விவசாயிகளுக்கு அடையாள எண்



7,030 விவசாயிகளுக்கு அடையாள எண்


கிருஷ்ணகிரி:பர்கூர் வட்டாரத்தில், வேளாண் அடுக்கு திட்டத்தில் இதுவரை, 7,030 விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, பர்கூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சிவசங்கரி கூறியதாவது: பர்கூர் வட்டாரத்தில், அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும், விவசாயிகளுக்கு சென்றடையும் வகையில், மத்திய அரசு வேளாண் அடுக்கு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில், விவசாயிகளின் நில உடமைகள் விபரம் சேகரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது.
இனிவரும் காலங்களில், அரசின் விவசாயம் சார்ந்த அனைத்து திட்ட பயன்களும், இதன் அடிப்படையிலேயே வழங்கப்படும். மேலும், பர்கூர் வட்டாரத்தில், விவசாயிகளின் பதிவு திட்டம் மூலம், அனைத்து கிராமங்களிலும், விவசாயிகளின் தரவுகள் சரிபார்க்கப்பட்டு இதுவரை, 7,030 விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கப்பட்டுள்ளன. எனவே, இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள், தங்களது கிராமத்திலுள்ள பொது சேவை மையத்தில், ஆதார் அட்டை நகல், சிட்டா, ஆதார் அட்டையுடன் இணைந்த மொபைல் எண் கொண்டு சென்று, இலவசமாக பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement