அதிக ஒலி சைலென்சர் பொருத்திய வாகனங்கள் போலீசார் பறிமுதல்
அதிக ஒலி சைலென்சர் பொருத்திய வாகனங்கள் போலீசார் பறிமுதல்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி நகரில், அதிக ஒலி எழுப்பும் சைலென்சர்களுடன் டூவீலர்களில் செல்பவர்களால், முதியவர்கள், நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து எஸ்.பி., தங்கதுரை உத்தரவுப்படி, அதிக ஒலி எழுப்பும் சைலென்சர்களுடன் டூவீலர்களில் சென்றவர்கள் மீது, போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிந்து, வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி ரவுண்டானா, பெங்களுரு சாலையில் போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., ஜோதி பிரகாஷ், எஸ்.எஸ்.ஐ., ஜெகன்நாதன், முருகேசன் மற்றும் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, டூவீலர்களில் அதிக ஒலி எழுப்பும் வகையில் சைலென்சர்கள் பொருத்தப்பட்ட, 5 வாகனங்களை பறிமுதல் செய்து தலா, 10,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.