பால்குட ஊர்வலம்
புதுச்சேரி: புதுச்சேரி வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், அக்னிப் பிரவேச தினத்தை முன்னிட்டு 108 பால்குட அபி ேஷகம் நேற்று நடந்தது.
இதையொட்டி, காலை 6:00 மணிக்கு சிறப்பு ஹோமம், 9:00 மணிக்கு வைசியாள் வீதியில் உள்ள வாசவி திருமண மண்டபத்தில் இருந்து 108 பால்குடங்கள் பெண்கள் ஊர்வலமாக எடுத்து சென்று, அம்மனுக்கு அபி ேஷகம் செய்தனர்.
மதியம் 12:05 மணிக்கு மகா தீபாராதனை, மாலை 6:05 ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு புஷ்பயாகம், 8:30 மணிக்கு தீபாராதனை, பிரசாத விநியோகம் நடந்தது. திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement