சாலை பாதுகாப்பு வாரம் விழிப்புணர்வு போட்டி

புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்து போலீஸ், மாநில நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு கட்டுரை, ஓவியம் போட்டிகள் நடந்தது.

பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டியினை போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.

போக்குவரத்து எஸ்.பி., செல்வம், இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, மாநில நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி சதீஷ்குமார், பள்ளியின் முதல்வர் தேவதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில், சாலை பாதுகாப்பு தொடர்பான கட்டுரை போட்டியில் 120 கல்லுாரி மாணவர்களும், ஓவியப் போட்டியில் 130 பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர்.

போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு உயரதிகாரிகள் மூலம் விரைவில் பரிசுகள் வழங்கப்படும் என, போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

Advertisement