அங்கன்வாடி கட்டடம் கட்டும் பணி துவக்கி வைப்பு
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி சுப்பையா நகரில் புதிய அங்கன்வாடி கட்டும் பணியினை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணை இயக்குனர் ஆறுமுகம் துவக்கி வைத்தார்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை மூலம், தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட சுப்பையா நகரில் ரூ. 17.78 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணை இயக்குனர் ஆறுமுகம், பணியினை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுந்தரராஜ், உதவிப் பொறியாளர் சீனிவாசராம், இளநிலைப் பொறியாளர் தேவேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement