2025-26ம் நிதியாண்டு மத்திய பட்ஜெட் தாக்கல்; முக்கிய அம்சங்கள்

11


புதுடில்லி: பார்லிமென்டில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.


பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் நேற்று(ஜன.31) துவங்கியது. அப்போது லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இந்நிலையில், இன்று (பிப்.,01) முற்பகல்11 மணிக்கு பார்லிமென்டில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.


Tamil News
Tamil News
Tamil News
மத்தியில் பா.ஜ., தலைமையிலான அரசின் ஆட்சியில் 3வது முறையாக தாக்கல் செய்யப்பட்ட முழு பட்ஜெட் இதுவாகும். தொடர்ந்து 8வது முறையாக பார்லிமென்டில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

பட்ஜெட் உரையில் அவர் பேசியதாவது;



* இளைஞர் முன்னேற்றம், வேளாண்மை, வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட அம்சங்களை கொண்டு பட்ஜெட்டை தயாரிப்பு,


* வரிவிதிப்பு, நகர்ப்புற மேம்பாடு, கனிமவளம், நிதி மேலாண்மை,மின்சாரம், ஒழுங்குமுறை ஆகிய 6 துறைகளில் சீரமைக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.



* பாரதத்தை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்கும் பணியை செய்து வருகிறோம்


* உலகின் பெரிய பொருளாதரங்களிலேயே வளர்ச்சியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.


* நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்


* உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.


* நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது.


* பருப்பு உற்பத்தில் ஆறு ஆண்டுகளில் தன்னிறைவு அடைய இலக்கு.


* புதிய வேளாண் திட்டத்தின் மூலம் 1.7 கோடி விவசாயிகள் பயன்பெற உள்ளனர்.


* தாமரை விதைகளுக்காக புதிய வாரியம் பீஹாரில் அமைக்கப்படும்.


* விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படும். நாட்டின் முதுகெலும்பாக விவசாயிகள் திகழ்கின்றனர்.


* அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும்.


* கிசான் கிரெடிட் கார்டுகளுக்கான உச்சவரம்பு 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.


* உலகின் உற்பத்தி மையமாக இந்தியா திகழ சிறு,குறு நிறுவனங்கள் தான் காரணம்.

Advertisement