திருவிளக்கு பூஜை..
புதுச்சேரி: புதுச்சேரி கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலில் 14ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது.
புதுச்சேரி இ.சி.ஆர்., கொட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற நாகாத்தம்மன் கோவிலில் 14ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நேற்று மாலை நடந்தது. முன்னதாக காலை அம்மனுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது.
கொட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் திருவிளக்கு ஏற்றி வழிப்பட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement