வேலை வாய்ப்பு உருவாக்க செயல்திட்ட விளக்கம் நிகழ்ச்சி 

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்க செயல்திட்டம் விளக்க நிகழ்ச்சி நடந்தது.

தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மோகன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், கே.வி.ஐ.சி., பெங்களூரு துணை தலைமை செயலாக்க அதிகாரி மதன்குமார் செட்டி, பதிவாளர் (பொ) சுந்தரமூர்த்தி, கே.வி.ஐ.சி., சென்னை மாநில இயக்குனர் (பொ) சுரேஷ், துணை இயக்குனர் வாசிராஜன், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் அடல் இன்குபேஷன் சென்டரின் தலைமை செயலாக்க அதிகாரி விஷ்ணு வரதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கம் திட்டம் குறித்து விளக்கப்பட்டது. நுாற்றுாக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

Advertisement