கைவினை பொருட்கள் கண்காட்சி துவக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த பிரதமரின் விஸ்வகர்மா கைவினைப் பொருட்கள் கண்காட்சியை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.
மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை, புதுச்சேரி தொழில் மற்றும் வர்த்தகத்துறை, மாவட்ட தொழில் மையம் ஆகியன சார்பில், பிரதமரின் விஸ்வகர்மா கைவினைப் பொருட்கள் கண்காட்சி துவக்க விழா நேற்று நடந்தது.
கடற்கரை சாலை, காந்தி திடலில் நடந்த கண்காட்சியை கவர்னர் கைலாஷ்நாதன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, பார்வையிட்டார்.
முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தலைமை செயலர் சரத் சவுகான், தொழில்துறை செயலர் ஜவஹர், அமைச்சக விஸ்வகர்மா திட்ட இயக்குனர் ரமேஷ்யாதவ் உட்பட பலர் பங்கேற்றனர்.
கண்காட்சியில், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த கைவினை கலைஞர்கள், விஸ்வகர்மா தொழிலாளர்களின் கைவினைப் பொருள்கள், 160 அரங்குகளில் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
வரும் 13ம் தேதி நடக்கும் கண்காட்சியில், பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் கலைஞர்கள் பதிவு செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.