அடிக்கடி சிறுநீர் கழித்தால் ஆபத்து

பூனைகள் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் வெளியேற்ற கஷ்டப்படுதல், சிறுநீர் போகாமல் இருத்தல் போன்றவை 'பெலைன் லோயர் யூரினரி டிராக்ட் டிஸீஸ் (FLUTD)' எனும் சிறுநீரக பிரச்னையாகும். வாந்தி எடுத்தல், சாப்பிடாமல் இருத்தல், திடீரென உடல் இயல்பு நிலையில் இருந்து மாறுதல் போன்ற வேறு சில அறிகுறிகளும், இப்பிரச்னை தொடர்புடையதாகும்.
இது பொதுவாக, ஆண் பூனைகளுக்கு அதிகம் ஏற்படுகிறது. பிறந்து ஆறு மாதம் முதல், 5 வயதுக்குட்பட்ட பூனைகளே, அதிகம் பாதிக்கப்படுகிறது. இதை, ரத்தம், சிறுநீர் பரிசோதனைகள் மற்றும் எக்ஸ்ரே வாயிலாக உறுதி செய்யலாம். ஆரம்ப கட்டத்திலே, மருந்து, சிகிச்சை முறைகளில் குணப்படுத்திவிடலாம். பிரச்னையின் தன்மை தீவிரமாகும் பட்சத்தில், அறுவை சிகிச்சை செய்வதே தீர்வாக அமையும். எனவே, பூனையின் செயல்பாட்டில், மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால், உடனே கால்நடை மருத்துவரை அணுகுவதே சிறந்தது.
ஈரப்பதமுள்ள உணவுகள் கொடுப்பது, தண்ணீர் குடிப்பதை உறுதி செய்வது அவசியம். ட்ரை உணவுகள் மட்டும், அதிகம் கொடுத்தாலும், இச்சிக்கல் ஏற்படலாம்.
பி.வெங்கடேஷ்குமார், கால்நடை மருத்துவர், தேனி.
மேலும்
-
குலசையில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி பூமி பூஜையுடன் துவக்கம்!
-
ரெனோ கார்களுக்கு 'சி.என்.ஜி., கிட்'
-
நிதி நிறுவனம் நடத்தி கந்துவட்டி வசூல்; தி.மு.க., பிரமுகர் உட்பட 3 பேர் கைது
-
பாரதியார் பல்கலையில் புகுந்தது சிறுத்தை; மாணவர்கள் வெளியேற்றம்!
-
மதுரை காமராசர் பல்கலையில் தேசிய கருத்தரங்கு
-
அனுமதியின்றி கட்டிய வணிக வளாகங்களுக்கு 'சீல்': நெல்லை மாநகராட்சி நடவடிக்கை