நிதி நிறுவனம் நடத்தி கந்துவட்டி வசூல்; தி.மு.க., பிரமுகர் உட்பட 3 பேர் கைது

1

திருநெல்வேலி: அம்பையில் அனுமதி இல்லாமல் நிதி நிறுவனம் நடத்தி கந்துவட்டி வசூல் செய்த தி.மு.க., பிரமுகர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், வி.கே.புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், சிவந்திபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் அனுமதி இல்லாமல் நிதி நிறுவனம் நடத்தி, கந்துவட்டி வசூலித்ததாக புகார் எழுந்தது. இவருடன் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த இருவரும் சேர்ந்து வட்டி பேரில் பணம் கொடுத்து மக்கள் மீது அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

வி.கே.புரத்தில் கூலி தொழிலாளி சுரேஷின் மனைவி ரேவதி, உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக சுரேஷிடம் கடன் பெற்றிருந்தார். பணம் செலுத்த தாமதமானதால், நிதி நிறுவனத்தினர் அவரை மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய போலீசார், உரிய அனுமதி இல்லாமல் நிதி நிறுவனம் நடத்தி, கந்துவட்டி வசூலித்த தி.மு.க., பிரமுகர் சுரேஷ் உட்பட மூன்று பேரை கைது செய்தனர்.

Advertisement