துலாரிதேவி, மதுபானி கலை! பட்ஜெட் நாளில் சிறப்பு சேர்த்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

2

புதுடில்லி; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுபானி கலையையும், பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரிதேவியின் திறமையை போற்றும் வகையிலும் சேலை அணிந்து பார்லிமென்ட் வந்தார்.



மதுபானி கலை என்பது பழங்கால கலை வடிவம் ஆகும். இந்து கடவுள்கள், தெய்வங்கள் மற்றும் புராண காட்சிகள், சிக்கலான விரிவான ஓவியங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் இந்த கலை வடிவம் நூற்றாண்டுகளுக்கு முன்பே வீடுகள், கோவில்களை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.


மிதிலா ஆர்ட் இன்ஸ்டியூட்டில் ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்வுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுபானிக்கு சென்றார். அங்கு, அவர் துலாரி தேவி என்ற பெண்ணை சந்தித்தார்.

அப்போது தான் மதுபானி கலையை தெரிந்துகொண்டார். அவருக்கு துலாரி தேவி புடவை ஒன்றை பரிசாக அளித்தார். அந்த புடவையைத் தான் பட்ஜெட் தாக்கல் நாளில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்து உள்ளார். மதுபானி கலைக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவர் அந்த புடவையை அணிந்து வந்துள்ளார்.

துலாரி தேவி 2021ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement