ரூ.62 ஆயிரத்தை கடந்தது தங்கம்; பட்ஜெட் தினத்தில் 2 முறை விலை உயர்வு!


சென்னை: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தங்கம் விலை இன்று பிப்.,1ல் இரண்டாம் முறையாக அதிகரித்துள்ளது.


சர்வதேச சந்தை நிலவரங்களின் அடிப்படையில் தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் நிலவி வருகிறது. ஆனால், கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக, வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.60 ஆயிரத்தை கடந்து ஆபரண பிரியர்களிடையே அதிர்ச்சியை கொடுத்தது.


இந்நிலையில், இன்று காலை (பிப்.,01) சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.61,960க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.15 உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ. 7,745க்கு விற்பனை செய்யப்பட்டது.


இதன்பிறகு, மத்திய அரசு பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. இதன் தாக்கம் இன்று தங்கம் விலையிலும் எதிரொலித்துள்ளது. அதன்படி, தங்கம் விலை இன்று மதியம் 2வது முறையாக அதிகரித்துள்ளது.
சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.62,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 7,790க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம், தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.2,240 உயர்ந்துள்ளது.

Advertisement