8 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் நேற்று ராஜினாமா இன்று பா.ஜ.,வில் ஐக்கியம்

2

புதுடில்லி : டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 8 பேர் நேற்று ராஜினாமா செய்ததை தொடர்ந்து இன்று பா.ஜ.,வில் ஐக்கியமாயினர்.


70 தொகுதிகள் கொண்ட டில்லி சட்டசபைக்கு, வரும் 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது; 8-ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. இத்தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி - பா.ஜ., - காங்., இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், சட்டசபை தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கிடைக்காத ஆளும் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் எட்டு பேர், நேற்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். ராஜினாமா கடிதங்களை சட்டசபை சபாநாயகர் நிவாஸ் கோயலுக்கு அனுப்பினர்.

இன்று (01.02.2025) எட்டு எம்.எல்.ஏ.,க்களும் பா.ஜ., தேசிய துணை தலைவர் பைஜெயந்த்பாண்டா மற்றும் பா.ஜ., டில்லி பிரிவு தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் பா.ஜ.,வில் ஐக்கிமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement