சூடான் மார்க்கெட் தாக்குதலில் 54 பேர் பலி

1

ஓம்டுர்மன்: சூடானில் திறந்தவெளி மார்க்கெட்டில் கிளர்ச்சிப் படையினர் நடத்திய தாக்குதலில் 54 பேர் உயிரிழந்தனர்.

ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில், அதனை எதிர்த்து கிளர்ச்சிப் படையினர் போராடி வருகின்றனர். கடந்த 2023ம் ஆண்டு முதல் இருதரப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது.

இதுவரையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

இந்த நிலையில், ஓம்டுர்மன் பகுதியில் செயல்பட்டு வரும் திறந்தவெளி மார்க்கெட்டில் கிளர்ச்சி படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், பொதுமக்கள் 54 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 150க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

Advertisement