விரிவாக்க பகுதிகளுக்கு கூட்டு குடிநீர்ஈரோட்டில் தி.மு.க., வேட்பாளர் உறுதி


விரிவாக்க பகுதிகளுக்கு கூட்டு குடிநீர்ஈரோட்டில் தி.மு.க., வேட்பாளர் உறுதி


ஈரோடு :-ஈரோடு கிழக்கு தொகுதி, தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார், ஈரோடு வ.உ.சி., மைதான வளாகத்தில் உள்ள, 'வாக்கர்ஸ் கிளப்' பகுதியில் நடைபாதை மேற்கொண்டவர்களிடம் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது: கடந்த தை, 1 முதல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில், மாநகராட்சி பகுதியில் உள்ள, 33 வார்டுகளில், 150 கி.மீ., துாரத்துக்கு மேல் நடந்தே சென்று ஓட்டு சேகரித்துள்ளோம். அப்போது, அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தோம். பெரும்பாலான பகுதிகளில் சாலை, குடிநீர், கழிவுநீர் சாக்கடை போன்ற வசதிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இதில், சாலை, மின் கம்பம், குடிநீர் குழாய் பதித்தல் போன்ற பணிகளின் போது ஏற்பட்ட சேதங்களை சீரமைத்து தரக்கோரி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். அது நிறைவேற்றி தரப்படும். மகளிர் உரிமை தொகையில் விடுபட்டவர்களுக்கு, முதல்வர் பரிசீலித்து விரைவில் வழங்குவார். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்த அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், சி.என்.கல்லுாரியில் உள் விளையாட்டு அரங்கம், நுாலகம், சோலாரில் பஸ் ஸ்டாண்ட், ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் வளாகம், ரிங் ரோட்டை முழுமைப்படுத்தி, 4 வழிச்சாலையாக மாற்றியது போன்றவைகளுக்கு கூடுதல் வடிவமும், மக்கள் பயன்பாட்டுக்கு தேவையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். எனவே, இத்திட்டங்கள் தொடர, தி.மு.க.,வுக்கு ஓட்டளித்து ஆதரவு தரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement