குழந்தை வேலப்பர் கோவிலில் சங்காபிஷேகம்
போத்தனூர்: கோவை, ஈச்சனாரியில் பழனியாண்டவர் பாதயாத்திரை குழு சார்பில், குழந்தை வேலப்பர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மண்டல பூஜை நடந்து வந்தது.
நிறைவு நாளான நேற்று (48வது நாள்) மண்டல பூஜை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதனையொட்டி, 108 சங்குகளுடன் கோவில் நிர்வாகிகள், ஊர் நாயக்கர் முத்துசாமி தலைமையில் குருசாமி, வெங்கடாசலம் மற்றும் பாதயாத்திரை குழுவினர் கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து, குழந்தை வேலப்பருக்கு சங்காபிஷேகம், தீபாராதனை நடந்தது.
மதியம் அன்னதானம், மாலை வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி திருவீதி உலா, அர்த்தஜாம பள்ளியறை பூஜையுடன் நிறைவடைந்தது.
ஈச்சனாரி மற்றும் சுற்றுப் பகுதிகளை சேர்ந்தோர் திரளாக வந்திருந்து, குழந்தை வேலப்பரை தரிசித்து சென்றனர். ஏற்பாடுகளை, பழனியாண்டவர் பாதயாத்திரை குழுவினர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement