திருப்போரூர் ஆதார் மையத்தில் கூடுதல் கவுன்டர் அமைக்க கோரிக்கை

திருப்போரூர்,:திருப்போரூர் தாலுகா அலுவலக, ஆதார் சேவை மையத்தில், பொதுமக்கள் நீண்ட நேரம் நிற்பதால், கூடுதல் கவுன்டர்கள் திறக்க எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்போரூர் தாலுகா அலுவலகத்தில், ஆதார் சேவை மையம் உள்ளது. இங்கு, புதிய ஆதார் அட்டை பதிவு, முகவரி, பெயர்மாற்றம் என, பல பணிகளை மேற்கொள்ள, தினமும், ஏராளமானோர் வருகின்றனர்.

இதற்காக, காலை, 6:00 மணிக்கே, 100க்கும் மேற்பட்டோர், தாலுகா அலுவலகம் வந்து வரிசையில் நிற்கின்றனர்.

போதிய கவுன்டர் மற்றும் பணியாளர்கள் இல்லாததால், தினமும் 30, 40 பேருக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.

ஒரே கவுன்டர் இருப்பதால் டோக்கன் கிடைத்தவர்கள் மற்றும் கிடைக்காதவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றும் அவதிப்படுகின்றனர். இதனால், சில நேரங்களில் பொதுமக்களுக்கும், ஆதார் மைய ஊழியருக்கம் வாக்குவாதம் ஏற்படுகிறது.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி, திருப்போரூர் ஆதார் சேவை மையத்தில், கூடுதல் பணியாளர்களை நியமித்து, கூடுதல் கவுன்டர்களை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement