போதையில் பைக் ஓட்டிய போலீஸ்காரர் மீது வழக்கு
வில்லிவாக்கம்,வில்லிவாக்கம், எம்.டி.எச்., சாலையில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வந்த நபர், மற்றொரு வாகனத்தின் மீது மோதி, தகராறு செய்ததாக தெரிந்தது.
அங்கு பணியில் இருந்த வில்லிவாக்கம் போலீசார், அந்த நபரை பிடித்து சோதித்த போது, அவர் மது அருந்தி இருந்தது தெரிந்தது.
விசாரணையில், அண்ணா நகர் சட்டம் - ஒழுங்கு போலீசில் பணிபுரியும் போலீஸ்காரர் லட்சுமணன், 32, என்பது தெரிந்தது.
வில்லிவாக்கம் போலீசார், லட்சுமணன் மீது வழக்கு பதிந்து, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு, துறைரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement