அர்த்தநாரீஸ்வரர் கோவில் வளாகத்தில் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு
திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பில், திருச்செங்-கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் மலைப்பகுதி முழுவதும், ஒரு-முறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் கழிவு பொருட்-களை துாய்மை செய்யும் பணி நடந்தது. நம்ம திருச்செங்கோடு அமைப்பு தலைவர் பரந்தாமன் தலைமை வகித்தார். மெட்ரிக் பள்ளிகளின், மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி, குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., ஈஸ்வரன் துாய்மை பணியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, மலையடிவாரம், ஆறுமுகசாமி கோவிலில் துவங்கி, படி வழிப்பாதை வழியாக துாய்மை செய்து, மலை மீதுள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் வளாகத்தையும் சுத்தம் செய்-தனர்.மேலும், அர்த்தநாரீஸ்வரரர் மலைக்கோவிலுக்கு வாகனங்கள் செல்லும் மலைப்பாதை, 2.75 கிலோ மீட்டர் முழுவதும் துாய்மை செய்தனர். இதில், ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேக-ரிக்கப்பட்டு, திருச்செங்கோடு நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்-டது.