சர்வதேச தோல் கண்காட்சி துவக்கம்

சென்னை, இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு மற்றும் கவுன்சில், லெதர் எக்ஸ்போர்ட்ஸ் சார்பில், தோல் தொழிற்சாலை குறித்த கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஐ.டி.பி.ஓ., எனும் இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், 38வது இந்திய தோல் கண்காட்சியை, நேற்று துவங்கியது.

இந்த கண்காட்சி, நாளை மாலை வரை நடக்கிறது. காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, பார்வையாளர்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம். இந்த கண்காட்சியில், 392 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பிரேசில், சீனா, துபாய், எத்தியோப்பியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஹாங்காங், இந்தோனேசியா, ஸ்பெயின் உள்ளிட்ட, 19 நாடுகளை சேர்ந்த தோல் தொழில் நிறுவனங்கள், இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

தோல் உற்பத்தியில் உருவான பொருட்கள், தோல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் அதிநவீன இயந்திரங்கள் உள்ளிட்டவை, இதில் இடம்பெற்றுள்ளன.

வணிக ரீதியான ஒப்பந்தங்களும், இதில் கையெழுத்தாக உள்ளன. சி.எஸ்.ஆர்.ஐ.,- - சி.எல்.ஆர்.ஐ., நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள், இதில் பங்கேற்கின்றனர்.

கண்காட்சியை, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் சுப்ரியா சாஹு துவக்கி வைத்தார்.

Advertisement