இயற்கை உணவு தொழில்நுட்ப கண்காட்சி
நெய்க்காரப்பட்டி : பழநி நெய்க்காரப்பட்டியில் எஸ்.ஆர்.டி கல்வி குழுமத்தின் சார்பில் 'உதான் 25' கண்காட்சி நடைபெற்றது.
வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை வகித்தார். ராக்கெட் நிகழ்ச்சி, சந்திரனில் ரோவர் இயங்கும் மாடல், 700 வகையான தோசை , இயற்கை முறை நெல் உற்பத்தி செய்யும் முறை, கலப்படம் இல்லாத ஆரோக்கிய உணவு முறைகள், ஆள் இல்லாமல் இயங்கும் டூவீலர் நான்கு சக்கர வாகனங்கள், கழிவுநீரை நன்னீராகும் முறைகள், தொழில் முறைகள், விபத்து தடுப்பு தானியங்கி முறைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
ஆர்.ஆர்., பிரியாணி உரிமையாளர் தமிழ்ச்செல்வன், இஸ்ரோ விஞ்ஞானி ஆனந்தி, பழநி வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜேபி சரவணன், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா தலைவர் ஸ்ரீமதி, கண்பத் கிராண்ட் ஓட்டல் உரிமையாளர் ஹரிஹரமுத்து அய்யர், கந்த விலாஸ் விபூதி ஸ்டோர் உரிமையாளர் பாஸ்கரன் கலந்து கொண்டனர். கல்விக் குழும தாளாளர் ரஞ்சிதம், டிரஸ்டிகள் ராஜ்மோகன், கிரிநாத், பவிதா கலந்து கொண்டனர்.