அரசு பள்ளியில் முப்பெரும் விழா
வடமதுரை : வடமதுரை மேற்கு ரத வீதி அரசு துவக்கப்பள்ளியில் நுாற்றாண்டு, விளையாட்டு, ஆண்டு விழா என முப்பெரும் விழா நடந்தது.
வட்டார கல்வி அலுவலர்கள் நல்லுச்சாமி, முருகேஸ்வரி தலைமை வகித்தனர். வட்டார வள மைய அலுவலர் பாலமுருகன், கவுன்சிலர்கள் சகுந்தலா, மருதாம்பாள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் தனலட்சுமி முன்னிலை வகித்தனர். தலைமைஆசிரியர் சந்திரசேகர் வரவேற்றார். ஆண்டறிக்கையை உதவி ஆசிரியை ஜோஸ்பின் ஸ்டெல்லா மேரி வாசித்தார். பத்திர எழுத்தர் கோதண்டபாணி, பிரமுகர்கள் பழனிச்சாமி வேல்முருகன் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement