சிறுகூடல்பட்டி சிவன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
திருப்புத்துார் : திருப்புத்துார் ஒன்றியம் சிறுகூடல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் நகரச்சிவன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆறு கால யாகசாலை பூஜையை தொடர்ந்து நாளை காலை கும்பாபிேஷகம் நடைபெறுகிறது.
இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது திருப்பணி நடந்து கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜன.31 காலை யாகசாலை பூஜை துவங்கி இரவில் முதற்காலயாக பூஜை நிறைவுற்றது. பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில் சிவாச்சார்யார்கள் யாகசாலை பூஜைகளை செய்தனர். நேற்று காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, இரவில் மூன்றாம் கால யாக பூஜை நடந்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. இன்று காலை 9:15 மணிக்கு நான்காம் கால பூஜை துவங்குகின்றன. மாலை 6:15 மணிக்கு ஐந்தாம் கால யாகபூஜை துவங்குகிறது.
நாளை காலை 7:15 மணிக்கு ஆறாம் காலயாக பூஜை, காலை 9:05 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனை, காலை 9:15 மணிக்கு கடம் புறப்பாடும், தொடர்ந்து காலை 9:50 மணிக்கு விமான கும்பாபிேஷகமும் நடைபெறும். காலை 10:15 மணிக்கு மூலஸ்தான மகா கும்பாபிேஷகம் நடைபெறும். மாலை 6:05 மணிக்கு திருக்கல்யாணம், தொடர்ந்து ஐம்பெரும் கடவுளர்கள் திருவீதி உலா நடைபெறும்.
ஏற்பாட்டினை சிறுகூடல்பட்டி, சென்னல்குடி, குமாரப்பேட்டை நகரத்தார்கள் செய்கின்றனர்.