திருப்புத்துாரில் இளைஞர் வெட்டிக் கொலை
திருப்புத்துார்: திருப்புத்துார் அரசு மருத்துவமனை பின்புற வாசலில் இளைஞரை கொடூரமாக வெட்டி கொலை செய்து தப்பி ஓடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்புத்துார் அரசு மருத்துவமனை பின்புறம்சிவகங்கை ரோட்டில் நேற்று முன்தினம் இரவு 9:30 மணி அளவில் கும்பல் ஒன்று இளைஞர் ஒருவரை ஆயுதங்களால் முகத்தை சிதைக்கும் விதமாக வெட்டி தப்பி விட்டனர்.
சத்தம் கேட்டு வந்தவர்கள் காயமடைந்தவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இளைஞர் இறந்தார்.
போலீசார் விசாரணையில் கொலையானவர் திருப்புத்துார் மின்நகரைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சண்முகநாதன் 27, என்பது தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் காலையில் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடந்த தகராறில் சண்முகம் இருந்ததாகவும், அதன் தொடர்ச்சியாகவே சிவகங்கை ரோட்டில் நடந்த மோதல் என்பதும், அப்போது மறைந்திருந்த கும்பலும் சேர்ந்து தாக்கியதில் சண்முகம் படுகாயம் அடைந்து கொலையானது தெரியவந்துள்ளது.