தமிழத்தில் பிப்ரவரி 5ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்; வானிலை மையம் கணிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று (பிப்.,02) முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (பிப்.,02) முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement