டேவிஸ் கோப்பை: இந்தியா வெற்றி

புதுடில்லி: டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்திய அணி 4-0 என வெற்றி பெற்றது.
டில்லியில், டேவிஸ் கோப்பை டென்னிஸ் 'வேர்ல்டு குரூப்-1, பிளே-ஆப்' சுற்று போட்டி நடந்தது. இதில் இந்தியா, டோகோ அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவில் சசிகுமார் முகுந்த், ராம்குமார் ராமநாதன் வெற்றி பெற, இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.


இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ரித்விக் சவுத்ரி ஜோடி, டோகோவின் டிங்கோ அகோமோலோ, ஹோடபாலோ இசக் படியோ ஜோடியை சந்தித்தது. அபாரமாக ஆடிய இந்திய ஜோடி 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது.

மாற்று ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் கரண் சிங், டோகோவின் ஹோடபாலோ இசக் படியோ மோதினர். அறிமுக போட்டியில் அசத்திய கரண் சிங் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

முடிவில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 'வேர்ல்டு குரூப்-1' சுற்றுக்கு முன்னேறியது.

Advertisement