மின்னல் வேகத்தில் குழந்தையின் உயிர் காத்த வாலிபர்: குவிகிறது பாராட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வீட்டின் அருகே தேங்கிய மழை நீரில் விழுந்து தத்தளித்த குழந்தையை மின்னல் வேகத்தில் ஓடி வந்து காப்பாற்றிய இளைஞரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம், பி.அன்.டி காலனி பகுதியில் கனமழை காரணமாக வீட்டின் முன் மழை நீர் தேங்கி இருந்தது. ஒரு பெண் குழந்தை தண்ணீரில் விழுந்து தத்தளித்து கொண்டு இருந்தது. அப்பகுதியில் நின்று கொண்டிருக்கும் ஒருவர் ஓடி வந்து அக்குழந்தையை காப்பாற்றினார்.
அந்த குழந்தையை மீட்பதும், மீட்கப்பட்ட குழந்தை அவரது தாயிடம் ஒப்படைப்பதும் அங்கிருந்த சி.சி.டி.வி.,யில் பதிவாகியிருந்தது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மழை நேரங்களில் தெருக்களில் விளையாட விடும் பெற்றோர்கள் குழந்தைகளை மிகவும் கவனத்துடன் பார்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து (1)
Jay - Bhavani,இந்தியா
11 மார்,2025 - 17:27 Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement