வீராபுரத்தில் தீப்பற்றி எரிந்த மின்மாற்றி
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த மகேந்திரா சிட்டி பகுதியில் வீராபுரம் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இதில் இருந்து மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் சுற்றியுள்ள குடியிருப்புகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு துணை மின் நிலையத்தில் இருந்த 230 கே.வி. மின் மாற்றி தீடிரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மகேந்திரா சிட்டி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இதனால் இந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டது. மின் மாற்றியை சீரமைக்கும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement