அஞ்சூர் ஏரிக்கரை சாலையில் மின் விளக்கு அமைக்க கோரிக்கை

சிங்கபெருமாள் கோவில்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், அஞ்சூர் -குண்ணவாக்கம் ஏரிக்கரை சாலை 2 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை அஞ்சூர், குண்ணவாக்கம், ஈச்சங்கரணை உள்ளிட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், அனுமந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.

தென்மேல்பாக்கம், அனுமந்தபுரம், கொண்டமங்கலம் கிராம மக்கள் மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு சென்று வரவும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலையில் இருந்த மின் விளக்குகள் உடைந்து, மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளதால் இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வரும் சூழல் உள்ளது. இரவு நேரங்களில் பாதை தெரியாமல் வளைவில் ஏரியில் தவறி விழும் அபாயம் உள்ளது.

எனவே இந்த சாலையில் மீண்டும் மின் விளக்குகள் அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement