போலீஸ் செய்தி

பட்டாசு திரி பறிமுதல்

சாத்துார்:ஏழாயிரம் பண்ணை எஸ்.ஐ., ஹரிராம் அன்பின் நகரம் பகுதியில் ரோந்து சென்ற போது ஏசுக் கனி 52. வீட்டில் வைத்து பட்டாசு திரி தயாரித்தார். அவரிடமிருந்து பட்டாசு திரியை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

புகையிலை; மூவர் கைது

சாத்துார்: தாயில்பட்டி கலைஞர் காலனியை சேர்ந்தவர்கள் ஞானசுந்தரி 60, பாண்டியன் 59. இருவரும் நடத்தி வரும் பெட்டிக்கடையில் புகையிலை பாக்கெட் விற்பனை செய்தனர்.

போலீசார் அவர்களிடம் இருந்து புகையிலை பாக்கெட்டை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

விருதுநகர் நாரணாபுரத்தை சேர்ந்தவர் மாரீஸ்வரன், 35. எத்தல் ஹார்வி மகளிர் பள்ளி அருகே புகையிலை பாக்கெட் விற்றார். அவரிடமிருந்து புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement