இசையம்பலம் பள்ளியில் பாரம்பரிய விதை கண்காட்சி
வானுார் : சர்வதேச நகரமான ஆரோவில்லில் இசையம்பலம் பள்ளியில் பாரம்பரிய விதை, காய்கறிகள் மற்றும் சிறுதானிய உணவுத் திருவிழா நடந்தது.
ஆரோவில் அறக்கட்டளை செயலர் ஜெயந்தி ரவி வழிகாட்டுதலின்படி, ஆரோவில் ஆலங்குப்பம், இசையம்பலம் பள்ளி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு விதை சேகரிப்பாளர் கூட்டமைப்பு இணைந்து இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
கண்காட்சியை ஆரோவில் முன்னோடி விதை சேகரிப்பாளர் தீபிகா குண்டா ஜி துவக்கி வைத்தார். கண்காட்சியில் 500க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதைகள் மற்றும் காய்காறிகள், கிழங்கு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பார்வையாளர்களுக்கு இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் வழங்கப்பட்டன.
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள், ஆரோவில் வாசிகள், முன்னோடி விவசாயிகள், பாரம்பரிய விதை சேகரிப்பாளர்கள், பள்ளி மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் பாரம்பரிய விளை யாட்டுகள் நடந்தது.
ஏற்பாடுகளை இசையம்பலம் பள்ளியின் இயக்குநர் சஞ்சீவ் ரங்கநாதன், தமிழ்நாடு விதை சேகரிப்பாளர் கூட்டமைப்பு சேகர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.