போதுமான பஸ் வசதியின்றி முகூர்த்த நாளில் மக்கள் அவதி

கடலுார் : கும்பாபிேஷகம் மற்றும் முகூர்த்த நாளில் சென்னை, திருச்சி போன்ற பெரு நகரங்களுக்கு போதுமான பஸ் வசதி இல்லாததால், கடலுார் பஸ் நிலையத்தில் பயணிகள் தவித்தனர்.

கடலுாரில் பிரசித்த பெற்ற 108 வைணவ தலங்களில் ஒன்றான திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் கும்பாபிேஷ விழா மற்றும் பல்வேறு கிராமங்களில் கும்பாபிேஷ விழா நேற்று நடந்தது.

அதேபோல், நேற்று அதிக அளவிலான திருமணங்கள் நடந்தது. அதையொட்டி ஏராளமானோர் பஸ் மற்றும் வாகனங்களில் கடலுார் வந்தனர். அதனால கடலுார் சாலைகளில் நேற்று அதிகாலை முதல் போக்குவரத்து நெரிசல் இருந்தது.

மதியத்திற்கு பின் ஊருக்கு திரும்புபவர்கள் கூட்டம் கடலுார் பஸ் நிலையத்தில் அதிகரித்தது. சென்னைக்கு அதிகளவில் பஸ்கள் விடப்பட்டும் பயணிகளுக்கு போதுமானதாக இல்லை. மதியம் வேளையில் சென்னைக்கு செல்ல போதுமான பஸ் இல்லாமல், பஸ் நிலையத்தில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். மேலும், திருச்சி உள்ளிட்ட நெடுந்துார நகரங்களுக்கு செல்லவும் போதுமான பஸ் வசதி இல்லாமல் மக்கள் தவித்தனர்.

Advertisement