இலவச எலக்ட்ரீசியன் பயிற்சி
திருப்பூர், : திருப்பூர், காங்கயம் ரோடு, முதலிபாளையம் பிரிவில், கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது.
இங்கு எலக்ட்ரிக்கல் வயரிங், பிளம்பிங் ஒர்க் மற்றும் வீட்டு உபயோக சாதனங்கள் சரி செய்தல் குறித்த பயிற்சி வகுப்பு துவங்க உள்ளது.
எழுதப்படிக்க தெரிந்த, 18 முதல், 45 வயதுக்கு உட்பட்ட இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. 30 நாள் பயிற்சியில், தேநீர், மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிவில் மத்திய அரசு மற்றும் கனரா வங்கி சான்றிதழும் வழங்கப்படும்.
பயிற்சியின் போது விண்ணப்பதாரருக்கு உதவ வங்கிக் கணக்கு துவங்கி தரப்படும். பயிற்சிக்கு பின், தொழில் தொடங்க கடன் பெற ஆலோசனைகளும் வழங்கப்படும்.
பயிற்சிக்கு, 'கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், 335/பி, வஞ்சியம்மன் கோவில் எதிரில், முதலிபாளையம் பிரிவு, காங்கேயம் ரோடு, விஜயாபுரம், திருப்பூர், 641606,' என்ற முகவரிக்கு நேரில் வரவும்.
மேலும் விவரங்களுக்கு 94890 43923, 99525 18441 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, பயிற்சி நிலைய இயக்குனர் சதீஷ்குமார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.