ஸ்ரீ பொன்னியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மயிலை கிராமத்தில் புகழ்பெற்ற பழமையான கோவிலாக ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 1996 ம் ஆண்டு கும்பாபிஷேக விழா விமர்சையாக நடந்தது. பின், 2001 ம் ஆண்டு தேர்திருவிழா ஒரு வார விழாவாக நடத்தப்பட்டது.
தொடர்ந்து ஆண்டுதோறும் ஆடித்திருவிழா, நவராத்திரி விழா, தை வெள்ளி சிறப்பு விழாக்கள், விசேஷ தினங்களின் சிறப்பு வழிபாடு நடந்து வந்தது.
நாளடைவில் கோவில் பழுதடைந்ததால் மயிலை கிராமத்தினர் கோவில் விமானம் உள்ளிட்ட புது சன்னிதிகள் ஏற்படுத்த முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக பல லட்சம் செலவில் கோவில் விமானம் சீரமைக்கப்பட்டு வண்ணம் தீட்டுதல் , நவகிரக சன்னிதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட திருப்பணி நடந்து வந்தது.
பணி முடிந்து கும்பாபிஷேகம் நடத்த மக்கள் தீர்மானித்தனர்.
இதையடுத்து கும்பாபிஷே க விழா கடந்த 30 ம் தேதி கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், யாகம் நடந்து வந்தது.
நேற்று காலை 7:.00 மணியளவில் கலசபுறப்பாடுடன் தலைமை சிவாச்சாரியர் குழுவினர் விமானத்தின் மேல் நின்று கும்பாபிஷே கம் செய்தனர்.
தொடர்ந்து, மகா தீபராதனை நடந்தது. அம்மனுக்கு வேதமந்திரம் உச்சரிப்புடன் மகா அபிஷகம் நடந்தது. பிறகு சிறப்பு அலங்காரத்தில் பொன்னியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழா ஒட்டி பக்தர்களுக்கு பிரசாத பை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.