ஊத்துக்காடு எல்லம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த ஊத்துக்காடு கிராமத்தில், எல்லம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 30ல் கணபதி பூஜை மற்றும் மாலை 5:00 மணிக்கு பிரவேச பலி பூஜையுடன் விழா துவங்கியது.
கடந்த 31ம் தேதி காலை 9:00 மணிக்கு சாந்தி ஹோமம், மாலை 5:00 மணிக்கு முதல் கால பூஜை. நேற்று முன்தினம் இரண்டாம் கால பூஜை, மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடந்தன.
நேற்று காலை 8:00 மணிக்கு நான்காம் கால பூஜையும், காலை 10:00 மணிக்கு கலச புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து, காலை 10:20 மணிக்கு கோபுர கலசத்தின் மீது, புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பின், மூலவர் எல்லம்மனுக்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், கோவில் அறங்காவலர்கள் மற்றும் பல்வேறு கிராம வாசிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement