திருவிளக்கு பூஜை

திருப்பூர், : ஸ்ரீசத்ய சாய்பாபா 100வது பிறந்த நாள் முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட சத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதில் ஒரு நிகழ்வாக, 100 கோவில்களில் திருவிளக்கு பூஜை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அவ்வகையில் முதல் திருவிளக்கு பூஜை, அண்ணா காலனி, பால முருகன் கோவிலில் நடைபெற்றது. காந்தி நகர் கிளை சேவா சமிதி சார்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. திருவிளக்கு பூஜையின் நோக்கம், குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் 75 பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.திரளான மக்கள் மற்றும் சேவா சமிதி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement