தெருவிளக்குகள் எரியாததால் தீப்பந்தம் ஏற்றி போராட்டம்

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த பூங்குணம் ஊராட்சியில் தெருவிளக்கு எரியாததால் மின்கம்பத்தில் தீப்பந்தம் ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பண்ருட்டி அடுத்த பூங்குணம் ஊராட்சி கம்பன் நகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த கம்பன் நகர் மக்கள் நேற்று இரவு மின் கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement